பிளாட் நம்பர் 5, ஏகாம்பரர் நாயக்கர் தொழில்பேட்டை ஆலப்பாக்கம் சென்னை - 166

 சுயவரம

வணிகம

செய்திகள

கல்வி

கோவில்கள்

சினிமா

அனைத்தும்

சுயமவரம

சினிமா


தேர்தல் வந்தாச்சு.. சென்னையில் மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பாஸ்- சட்டசபையில் ஜெ. அறிவிப்பு

சென்னை: 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் பிப்ரவரி 24ம் தேதி முதல் சென்னையில் இலவசமாக பேருந்துகளில் பயணம் செய்யலாம் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதற்கான பஸ் பாஸ் வழங்கப்படும் என்றும், அதற்கான விண்ணப்பங்களை பேருந்து பணிமனைகளில் பெற்றுக்கொள்ளலாம், அரசு போக்குவரத்துக்கழக இணையதளங்களிலும் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என்றும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

 சட்டசபையில் 110 விதியின் கீழ் ஜெயலலிதா இன்று வாசித்த அறிக்கை: கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின் தமிழக மக்களின் நலன் காக்கும் வகையில் எவ்வாறெல்லாம்

 செயல்படும் என்பது பற்றி அப்போது வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் மிகத் தெளிவாக நாங்கள் குறிப்பிட்டிருந்தோம். மூத்த குடிமக்களுக்கு அரசுப் பேருந்தில் பயணம் செய்ய கட்டணமில்லா பஸ் பாஸ் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை தேர்தல் அறிக்கையில் நாங்கள் அளித்திருந்தோம்.

இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், முதற்கட்டமாக சென்னை மாநகரப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் வகையிலான ஒரு திட்டம் செயல்படுத்தப்படும். இதன்படி, 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் குளிர் சாதன வசதி இல்லாத சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக அனைத்து பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம்.

இதற்கென மாதத்திற்கு 10 டோக்கன்கள் வழங்கப்படும். பேருந்து நடத்துநரிடம் இந்த டோக்கன்களை கொடுத்து கட்டணம் ஏதும் இல்லாமல் மூத்த குடிமக்கள் பயணம் செய்யலாம். இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள விழைவோர் அதற்குரிய படிவத்தில் தங்களது புகைப்படத்தினை இணைத்து அடையாள அட்டை மற்றும் டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம். இதற்கான விண்ணப்பப் படிவத்தை போக்குவரத்து துறையின் இணையதளத்திலிருந்து

 பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பஸ் டெப்போக்களிலும் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பஸ் டெப்போக்களில் கொடுத்து அடையாள அட்டை மற்றும் டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம். எந்தெந்த பஸ் டெப்போக்களில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் போக்குவரத்துத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்படும். விண்ணப்பங்கள் கொடுப்பதற்கென கடைசி தேதி என்று எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை.

 தேவைப்படுவோர் இதற்கான விண்ணப்பத்தை எப்போது வேண்டுமானாலும் அளிக்கலாம். சென்னை மாநகர போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் இந்த திட்டம் 24.2.2016 முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

 இந்த புதிய திட்டத்திற்கு பொதுமக்களிடையே உள்ள வரவேற்பைக் கண்டறிந்து மற்ற இடங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும். என்னுடைய இந்த அறிவிப்பின் மூலம் 2011ம் ஆண்டு அதிமுக தேர்தல் அறிக்கையில் எங்களால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன

 என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளுக்கும் மேலாக பல்வேறு நலத் திட்டங்களையும் எனது தலைமையிலான அரசு செயல்படுத்தியுள்ளது

 என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். அதிமுக தேர்தல் அறிக்கை 2011ம் ஆண்டு அதிமுகவின் தேர்தல் வாக்குறுதியில், அதிமுக ஆட்சிக்கு வந்தால், 58 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் உள்ளூர் மற்றும் அரசு பேருந்துகளில் பக்கத்து நகரங்கள், கிராமங்களுக்கு சென்று வர இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார் ஜெயலலிதா. அதேபோல,ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய தலைமையகங்களில்,

 முதியோர்கள் மற்றும் ஆதரவற்ற முதிய ஆண்கள் மற்றும் பெண்கள், ஆதரவற்ற குழந்தைகள் தங்குவதற்கு சிறப்பு தங்கும் விடுதிகள் ஏற்படுத்தப்படும். அங்கு அவர்களுக்கு மூன்று வேளை உணவும், புத்தக நிலையமும், தியான மண்டபமும், இனிமையான இயற்கை சூழலும் ஏற்படுத்தப்பட்டு, ஆதரவற்ற முதியோர்கள், ஆதரவற்ற குழந்தைகள் மத்தியில் அன்பு, பாசம் மற்றும் அறிவு பரிமாற்றம் ஏற்படும்படியாக திட்டம் தீட்டப்படும். அங்கு ஒருவருக்கொருவர் ஆதரவு என்ற இனிமையான சூழல் ஏற்படுத்தப்படும்.

 அவர்களுக்கு தொலை தொடர்பு மருத்துவ வசதியும் ஏற்படுத்தித் தரப்படும். அந்தந்த மாவட்டங்களில் சிறப்பாக பணி செய்யும் குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு,

 அவர்களுடன் அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தும். அதற்குத் தேவையான நிலம், கட்டமைப்பு மற்றும் அதை நடத்த தேவையான நிதியும் தரப்படும். பெரிய தொழில் நிறுவனங்களின் உதவி பெற்று இத்திட்டத்தை தொடர்ந்து நடத்த வழிவகை செய்யப்படும் என்று கூறியிருந்தார். ஆட்சி முடியப்போகும் இந்த தருணத்தில் இலவச பஸ் பாஸ் திட்டத்தை முதற்கட்டமாக சென்னையில் அறிவித்துள்ளார்.

Vishnu Temples Kumbakonam Siva Temples Kumbakonam

 மகளிர் பக்கம்

நாணய பக்கம்

சிறுவர் பக்கம்

ஆன்மீக பக்கம்

அரசியல் பக்கம்

மருத்துவ பக்கம்

 

பசுமைபக்கம்

வாகனபக்கம்

கட்டுமானம்

l

அரசு ஊழியர்கள் போராட்டம்
 

சென்னை: 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நேற்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சாலை ஓரங்களிலும், முகாம்களிலும் சமையல் செய்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும், காலி பணியிடங்களை நிரப்பவேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கடந்த 10ம் தேதி முதல் காலவரையற்ற தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் அலுவலகப் பணிகள் முற்றிலும் முடங்கும் சூழல் உருவாகியுள்ளது. கடந்த 9 நாட்களாக தொடர்ந்து பணிகள் நடைபெறாததால் ஆவணங்கள் தேங்கியுள்ளன.

இன்று 10-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. அரசு ஊழியர்களின் சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. வாகனங்களில் செல்லக்கூடியவர்கள் போக்குவரத்து நெரிசலால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதால் அரசு ஊழியர்கள் தங்களது மறியல் போராட்டத்தை கைவிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் காத்திருக்கும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

சென்னை, எழிலகத்தில், ஆயிரம் ஊழியர்கள் குவிந்தனர் அங்கேயே சமைத்து சாப்பிட்டு தங்களது போராட்டத்தை இரவிலும் தொடர்ந்தனர். அதேபோல் தமிழகம் முழுவதும், ஆட்சியர் அலுவலகங்களிலும், ஊழியர்கள் இதுபோன்று காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கோவை, திருச்சி, புதுக்கோட்டை, விருதுநகர், நாமக்கல் தமிழகம் முழுவதும், ஆட்சியர் அலுவலகங்களிலும், ஊழியர்கள் இதுபோன்று காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அங்கேயே சமையல் செய்தும் போராட்டத்தை நடத்தி வருகின்றன. சில இடங்களில் ஒப்பாரி வைத்தும், சாலை ஓரங்களில் சமையல் செய்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

 நெல்லையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து, காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், இரவிலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களது கோரிக்கைகள் குறித்த அரசாணை விரைவில் வரும் என்ற நம்பிக்கை உள்ளது.

அதுவரையில் எங்களது காத்திருப்பு போராட்டம் தொடரும்.என்று அரசு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்

 

மாநாட்டை வெற்றி பெறச் செய்யுமாறு தேமுதிக தொண்டர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்

சென்னை: காஞ்சிபுரம் வேடல் பகுதியில் நடைபெறும் தமிழக அரசியலின் திருப்புமனை மாநாட்டுக்கு தேமுதிக தொண்டர்கள் குடும்பத்தோடு பங்கேற்க அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அழைப்பு விடுத்துள்ளார். தேமுதிகவின் மாநாடு நாளை மாலை 3 மணிக்கு காஞ்சிபுரம் - வேடல் பகுதியில் நடைபெறுகிறது. மாநாட்டில் பங்கேற்று வெற்றி பெறச் செய்யுமாறு அக்கட்சித் தொண்டர்களுக்கு தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தேமுதிகவின் அரசியல் திருப்புமுனை மாநாடு காஞ்சிபுரம் வேடலில் 20-ம் தேதி (சனிக்கிழமை) நடக்கவுள்ளது. இந்த மாநாட்டில் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் தங்களது நண்பர்கள், குடும்பத்தார் என அனைவரையும் அழைத்து வரவேண்டும்.

இந்த மாநாட்டை அனைத்து தரப்பு மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கிற வகையில், துணிந்திடு தவறுகளை களைந்திடு புதிய மாற்றத்துக்கான ஆரம்பம் என்ற முழக்கத்தோடு மாநாடு நடத்தப்படுகிறது. தேமுதிகவின் லட்சியப் பயணம் மக்கள் நலனுக்கான பாதையில் இருக்கும் என்பதை தமிழக மக்கள் தெரிந்து கொள்வதற்கு இந்த மாநாட்டை தேமுதிகவினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாநாட்டுக்கு வருவதற்காக முன் பதிவு செய்யப்பட்ட தனியார் பேருந்துகளின் உரிமையாளர்கள், ஆட்சியாளர்களின் மிரட்டுதலால் முன் தொகையை திருப்பி அளித்து வருவதாக மாவட்டச் செயலாளர்கள் கூறுகின்றனர். இதற்கெல்லாம் அஞ்சிடாமல், ரயில், கார், வேன் போன்றவற்றின் மூலம் மாநாட்டுக்கு வந்துவிடுங்கள்.

மேலும், தொண்டர்கள் வருகையை தடுக்க காவல்துறையினர் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தக் கூடும். எனவே, மாநாட்டு திடலுக்கு மதியம் 3 மணிக்கு முன்பாகவே தொண்டர்கள் வந்துவிட வேண்டும். நம்முடைய "தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு" மாபெரும் வெற்றியடைய வேண்டும் என்ற ஆர்வமும், அக்கறையும் தங்களுக்கு எந்த அளவிற்கு உள்ளதோ, அதைப் போல இதில் கலந்து கொள்கின்ற கழக நிர்வாகிகள், தொண்டர்கள், ஆதரவாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள், தாய்மார்கள், வணிகர்கள் என அனைத்து தரப்பு பொதுமக்களும் பாதுகாப்பாக வந்து செல்ல வேண்டும் என்பதில் நான் மிகுந்த அக்கறையுடன் கண்ணும், கருத்துமாக இருக்கின்றேன். எனவே, கழக நிர்வாகிகள் எவ்வளவு முன் கூட்டி மாநாட்டிற்கு அனைவரையும் அழைத்து வருகின்றீர்களோ, அதைப் போலவே மாநாடு முடிவடைந்த பிறகு காத்திருந்து, பொறுமையாக தங்களுடன் வந்தவர்களை எல்லாம் ஒன்றிணைத்து,

அவரவரின் இருப்பிடங்களுக்கு பத்திரமாக அழைத்துச் செல்ல வேண்டியது தங்களின் தலையாய கடமையாகும். வாகனங்களை ஒழுங்கு படுத்துவதற்கும், மாநாட்டில் கலந்துகொள்பவர்களை ஒழுங்குபடுத்தி அமர வைப்பதற்குமான பணியில் தொண்டர் அணியை சார்ந்தவர்கள் ஈடுபடுவார்கள். மேலும், மாநாட்டுக்கு பாதுகாப்போடு வந்து பாதுகாப்போடு செல்ல வேண்டும். காஞ்சி குலுங்கட்டும், காலம் கனியட்டும் ஆட்சி மாறட்டும்' என்ற கோஷத்துடன் தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாட்டை வெற்றிபெறச் செய்ய வேண்டும்'' என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்

திண்டுக்கல் அருகே டாஸ்மாக் பாரில் ரகளை: தடுக்கச் சென்ற எஸ்.ஐ-க்கு கத்திக்குத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே அரசு மதுபானக் கடையில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டவர்களை பிடிக்கச் சென்ற சிறப்பு உதவி ஆய்வாளரை சிலர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் மாணிக்கம். இவர் இன்று வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் அதிகாரிபட்டியில் உள்ள டாஸ்மாக் பாரில் சிலர் மது அருந்திவிட்டு தகராறு செய்து கொண்டிருப்பதாக சாணார்பட்டி காவல்நிலையத்திற்கு புகார் வந்தது.

இதையடுத்து அங்கு சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் மாணிக்கம் தகராறில் ஈடுபட்டிருந்தவர்களை பிடிக்க முயன்றுள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த சிலர் பயங்கர ஆயுதங்களுடன் மாணிக்கத்தை தாக்கியுள்ளனர். தாக்குதலில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். தகவல் அறிந்த ஊர் மக்கள் அங்கிருந்து மீட்டு திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சாணார்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

 

 பாரதன் என்பதில் பெருமிதம் கொள்வோம் நமக்கு இல்லை ஈடு என்பதை உணர்ந்திடுவோம்

ஒரே காலகட்டத்தில்

உலகின் மற்ற பகுதியில

இந்தியாவில்

சென்செக்ஸ் 96 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கியது வர்த்தகம்


சட்டப்பேரவையில் உண்மைக்கு மாறாக பேசி மக்களை ஏமாற்றும் முதல்வர்: ஸ்டாலின் சாடல்

சென்னை: சட்டப்பேரவையில் உண்மைக்கு மாறாக பேசி மக்களை முதல்வர் ஜெயலலிதா ஏமாற்றி வருவதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சட்டமன்றத்தில் உண்மைக்கு மாறான தகவல்களைத் தருவது முறையற்ற செயலாகும். ஆனால் முடிவடையவிருக்கும் அ.தி.மு.க ஆட்சியில் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி அமைச்சர்கள் பலரும் உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்து வருகின்றனர். இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடரில் பேசிய முதல்வர் ஜெயலலிதா தனது உரையில், அ.தி.மு.க அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுவிட்டதாகக் கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் முகநூலில் பதிவு செய்துள்ளது: தனது உரைக்கு தானே மறுப்பு தெரிவிப்பதுபோல, 60 வயது நிறைந்த மூத்த குடிமக்களுக்கு பிப்ரவரி 24 முதல் சென்னையில் இலவச பேருந்து பயணத்திற்கான பாஸ் வழங்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். அ.தி.மு.கவின் 2011 தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட இந்த வாக்குறுதியை, ஆட்சி முடியப் போகும் நேரத்தில், தனது பிறந்தநாளையொட்டி சென்னைவாழ் மூத்த குடிமக்களுக்கு மட்டும் நிறைவேற்ற முன் வந்திருக்கிறார். அதுவும் ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்களுக்கு 10 டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவித்திருப்பதிலிருந்து எத்தனை பேர் எந்தளவு பயனடைவார்கள் என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. சென்னைக்கு மட்டும் இந்தத் திட்டம் எனக் கூறி, மற்ற மாவட்டங்களில் படிப்படியாக நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்திருப்பதிலிருந்தே இந்தத் திட்டத்தின் மோசடியைப் புரிந்துகொள்ளலாம். இன்னும் சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துவிடும் எனத் தெரிந்தே இப்படியொரு அறிவிப்பை சட்டமன்றத்தில் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், அம்மா குடிநீர் என்ற பெயரில் சென்னையில் வழங்கப்படும் என அறிவித்தார். தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை என நான் தொடர்ந்து கேட்டு வந்த நிலையில், ஊடகங்களும் இது குறித்து கேள்வி எழுப்பியபின் ஒப்புக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜெயலலிதா அளித்தவை தேர்தல் வாக்குறுதிகள் மட்டுமல்ல, மோனோ ரயில் திட்டம், சென்னைக்கு துணை நகரம், வண்டலூரில் புதிய பேருந்து நிலையம் என ஆளுநர் அறிக்கையிலும் 110 விதியின் கீழும் அளித்த வாக்குறுதிகள் ஏராளம். அவற்றையெல்லாம் நிறைவேற்றியிருக்கிறாரா? உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் 2 லட்சத்து 42ஆயிரம் கோடி ரூபாய் நிதி வருவதாகச் சொன்னாரா? அந்த முதலீட்டைப் பெற்றுவிட்டாரா? அது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா? தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் மின்வெட்டை அகற்றுவேன் என்று சொன்னவர், ஒரு மெகாவாட் மின்னுற்பத்தியைக் கூட தன் ஆட்சியில் தொடங்காமல் இப்போது தமிழகம் மின்மிகை மாநிலம் என்கிறாரே, தமிழகத்தின் மின்தேவை எவ்வளவு, எவ்வளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது, வெளியிலிருந்து எவ்வளவு மின்சாரம் வாங்கப்படுகிறது, அதன் விலை என்ன, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் எந்தளவு கடன்சுமையில் இருக்கிறது என்பதையெல்லாம் வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா? அ.தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் விவசாயப் புரட்சிக்காகவும், மீனவர்களைப் பாதுகாக்க தனிப் படை அமைப்பது தொடர்பாகவும் கொடுத்த வாக்குறுதிகள் யாருக்கும் தெரியாமல் எப்படி நிறைவேற்றப்பட்டன என்ற ரகசியத்தையும் ஜெயலலிதா வெளியிடுவாரா? தமிழகத்தின் வளர்ச்சியை வீழ்ச்சிப் பாதைக்குத் தள்ளிய ஆட்சிதான் 5 ஆண்டுகால ஜெயலலிதா ஆட்சி. அதை மக்கள் உணர்ந்து தக்க பாடம் புகட்டுவதற்கான நாளை எதிர்பார்த்து இருக்கிறார்கள். இந்த உண்மையை மறைப்பதற்காகத்தான் சட்டமன்றத்திலேயே உண்மைக்கு மாறான தகவல்களை முதல்வர் பொறுப்பில் இருப்பவர் தெரிவிக்கிறார். ஆனால், உண்மையை உணர்ந்துள்ள மக்கள் மன்றம் தேர்தல் நாளில் அவருக்கு உரிய தீர்ப்பினை வழங்கக் காத்திருக்கிறது. இவ்வாறு ஸ்டாலின் முகநூலில் கூறியுள்ளார்
  

 

 

 

 

For Advertisments Call 9361661660

The Best View in IE 7 with 1366 X 768 Screen Resolution

A Concept Conceived, Designed & Maintained by www.bharathyellowpages.com